மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகாராஜா படத்தின் இயக்குனருடன் நேரில் சந்தித்த ரஜினிகாந்த்; ராஜ உபசரிப்பால் மகிழ்ச்சி.!
நடிகர்கள் விஜய் சேதுபதி, அனுராக், மம்தா மோகன்தாஸ், நடராஜன், அபிராமி, சிங்கம்புலி, அருள்தாஸ், பூவையார் உட்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம் மஹாராஜா. கடந்த 14 ஜூன் அன்று வெளியான திரைப்படம், ரூ.20 கோடி செலவில் தயாராகி ரூ.105 கோடியை கடந்து வசூல் செய்து சாதனை படைத்தது. பலதரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மஹாராஜா இயக்குனருடன் சந்திப்பு
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மஹாராஜா படத்தின் இயக்குனர் நித்திலனை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளும் தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து இயக்குனர் நித்திலன் கூறுகையில், "இந்த அற்புதமான சந்திப்புக்கு மிக்க நன்றி.
கோலிவுட்டின் தங்கசுரங்கத்தில் இருந்து வாழ்க்கை, அனுபவம் குறித்த நாவலை படிப்பது போல இருந்தது. ரஜினிகாந்த் அவர்களின் விருந்தோம்பல், மனிதநேயம் என்னை வியக்கவைத்தது. அவருக்கு மகாராஜா திரைப்படம் பிடித்துள்ளது மகிழ்ச்சியை வழங்குகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடி தூள்... விஜய் சேதுபதியின் மகாராஜா ஓடிடி ரிலீஸ் எப்போது.? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.!!
இதையும் படிங்க: Goat படத்தின் 3 வது பாடல் குறித்த அசத்தல் அப்டேட் இதோ; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!