#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முன்னாள் காதலிக்கு தூது விடும் மஹத். அப்போ யாசிக்காவின் நிலைமை அவ்ளோதானா?
தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் ஓன்று. சீசன் ஓன்று வெற்றி பெற்றதை தொடர்ந்து சீசன் இரண்டு ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது.
ஆரம்பத்தில் ரசிகர்களிடம் ஆர்வம் குறைவாகவே காணப்பட்டது, தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள சீசன் இரண்டு பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், இதில் போட்டியாளராக அஜித்துடன் மங்காத்தா,விஜய்யுடன் ஜில்லா போன்ற படங்களில் நடித்து பிரபலமான மஹத் பங்கேற்றார்.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே தனக்கு பிராச்சி மிஸ்ரா என்ற காதலி இருப்பதாக மக்களிடம் தெரிவித்துவிட்டு சென்றார்.
மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே தனது காதலியை பிரிந்து கவலைப்படுவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆரம்பத்தில் அனைவராலும் கவரப்பட்ட மஹத் பின்னர் திடீரென்று மற்றொரு போட்டியாளராக இருந்த யாஷிகாவுடன் காதல் கொண்டு ஆடை அனைவரிடமும் வெளிப்படையாக கூறினார்.மேலும் இருவரும் நெருக்கமாகவும் இருந்தனர்.
இதனால் கோபமடைந்த அவரது காதலி பிராச்சிமஹத் இனி என் வாழ்க்கையில் இல்லை என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து செய்த அட்டகாசங்களால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மஹத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு போட்ட குறும்படத்தோடு,இந்த உலகத்திலே உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என பிராச்சிக்காக பதிவிட்டிருந்தார்.
இதனை கண்ட ரசிகர்கள் யாஷிகாவின் நிலை என்ன என குழம்பி வருகின்றனர்.