மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது பிறந்தநாளன்று நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்.! சவாலை ஏற்பாரா தளபதி!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்து நாடு முழுவதும் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் மகேஷ்பாபு. டோலிவுட்டில் சூப்பர் ஸ்டாரான அவர் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். மேலும் அசுர வேகத்தில் பரவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ரசிகர்கள் யாரும் வெளிஇடங்களில் கூட வேண்டாம் என நேற்று மகேஷ்பாபு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
There couldn't be a better way to celebrate my birthday💚 #GreenIndiaChallenge
— Mahesh Babu (@urstrulyMahesh) August 9, 2020
I pass this on to @tarak9999, @actorvijay & @shrutihaasan. Let the chain continue and transcend boundaries😊 I request all of you to support the cause. One step towards a greener world! pic.twitter.com/MGDUf9B4xu
இந்நிலையில் இன்று அவர் #GreenIndiaChallenge ஐ நிறைவேற்றி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர், எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு இதைவிடச் சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. மேலும் #GreenIndiaChallenge-ஐ ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். எல்லைகளை கடந்து இந்த முயற்சி தொடரட்டும். மேலும் இந்த முயற்சிக்கு ஆதரவு தரும்படி அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். பசுமையான உலகை உருவாக்க முன்வாருங்கள் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தளபதி விஜய் இந்த சவாலை ஏற்று செய்து முடிப்பாரா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.