மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாமே திடீரென போய்விட்டதே... தன் அப்பா மறைவிற்கு பின் உருக்கமாக நடிகர் மகேஷ்பாபு போட்ட முதல் பதிவு!!
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் மகேஷ் பாபு. இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். இவருக்கு தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மகேஷ் பாபு தொடர்ந்து தனது குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகளால் பெரும் வேதனையில் உள்ளார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் மகேஷ்பாபுவின் அண்ணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி அவர்கள் காலமானார். மேலும் கடந்த 15 ஆம் தேதி பழம்பெரும் நடிகரும், மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த தொடர் இழப்புகளால் வேதனையின் உச்சத்தில் இருக்கும் மகேஷ்பாபுவிற்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
— Mahesh Babu (@urstrulyMahesh) November 24, 2022
இந்த நிலையில் மகேஷ்பாபு தனது தந்தை குறித்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், வாழும்போது உங்களை கொண்டாடினார்கள். உங்களது மறைவிற்குப் பிறகு இன்னும் அதிகமாக கொண்டாடுகிறார்கள். அது உங்களின் சிறப்பு. பயமின்றி தைரியத்துடனும், துணிச்சலும் இருப்பதே உங்களது இயல்பு. என் வழிகாட்டி, என் தைரியம், என் எதிர்பார்ப்பு என முக்கியமான அனைத்தும் போய்விட்டது.
இதுவரை உணராத வலியை நான் இப்போது உணர்கிறேன். இப்பொழுது நான் அச்சமற்றவனாக இருக்கிறேன். உங்கள் வெளிச்சம் எப்போதும் என்மீது பிரகாசிக்கும். உங்களை நான் மென்மேலும் பெருமையடையச் செய்வேன். உங்களது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வேன். லவ் யூ அப்பா.. எனது சூப்பர் ஸ்டார் எனக் கூறியுள்ளார்.