ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பிரபல நகைச்சுவை நடிகர் ஹரிஷ் பெங்கன் காலமானார்; திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி.!
மலையாளத்தில் காமெடி நடிகராக வலம்வந்தவர் ஹரிஷ் பெங்கண் (வயது 48). இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு மலையாள திரையுலகில் செல்வாக்கு அதிகம்.
கல்லீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த நடிகர் ஹரிஷ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி நடிகர் ஹரிஷ் காலமானார். அவருக்கு 49 வயது ஆகிறது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.