மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போடு தகிட தகிட.! சூர்யா 43-ல் இணைந்த மலையாள நட்சத்திரங்கள்.. அதிரடியான மாஸ் அப்டேட்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வரலாற்றுப் பின்னணியை கதையாகக் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்காராவுடன் தனது 43-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சூரரை போற்று ஹிந்தி திரைப்படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார் சுதா கொங்கரா.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அப்டேட்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பதால் விரைவிலேயே சூர்யா நாற்பத்தி மூன்று திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மலையாள சினிமாவின் இளம் நடிகர் துல்கர் சல்மான் இந்தத் திரைப்படத்தில் நடிக்க இருப்பது பற்றி தெரிவித்து இருந்தார்.
மேலும் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களைத் தொடர்ந்து மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளம் வந்த நஸ்ரியா சூர்யா 43 திரைப்படத்தில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஆக்ரோஷமான கல்லூரி இளைஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் அதற்காக அவர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.