தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
விக்ரம் படத்தால் புலம்பும் மணிரத்தினம்.! அதை பண்ணிருக்கவே கூடாது.!
கடந்த 2004 ஆம் வருடத்தில் மணிரத்தினம் இயக்கத்தில், தமிழில் ஆயுத எழுத்து எனவும், ஹிந்தியில் யுவா எனவும் வெளியிடப்பட்ட திரைப்படத்தின் மூலமாக, இரு மொழிகளிலும் இயக்குனராக களம் கண்டார் மணிரத்தினம். ஆனாலும், கடந்த 2010 ஆம் வருடம் அவர் இயக்கிய ராவணன் திரைப்படத்தில் இந்த யுத்தியை அவர் கையாண்ட போது, அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தமிழில் ராவணன் என்ற பெயரில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற போதிலும், இந்தியில் ராவன் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இது பற்றி சமீபத்தில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, மணிரத்தினம் வழங்கிய பேட்டியில் இரண்டு மொழி திரைப்படம் வழக்கத்தில் இல்லாத அந்த காலகட்டத்தில், ராவணன் படத்தை இரண்டு மொழி படமாக உருவாக்கியது மிக, மிக தவறு என்று கூறியுள்ளார். இந்த திரைப்படத்தை ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளிலும், உருவாக்கியது எனக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது என்றும் கூறியுள்ளார். மேலும், இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட பார்வையாளர்களுடனான தொடர்பை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது.
அவர் இயக்கி, இணைந்து தயாரித்த ராவன் திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், கோவிந்தா, நிகில் திவேதி, ரவி கிஷன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் மூலமாக, ஹிந்தி திரையுலகிற்கு முதன்முறையாக விக்ரம், பிரியாமணி உள்ளிட்டோர் அறிமுகமாயினர். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும், ஏ.ஆர்.ரகுமான் இசை, குல்ஜாரின் பாடல் வரிகள் போன்றவை நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் மொழியைப் பொறுத்தவரையில், வைரமுத்து பாடல் வரிகள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் 36 வருடங்களுக்குப் பிறகு, கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.