மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை மஞ்சிமா மோகன் வாழ்க்கையில் நடந்த முதல் கசப்பான அனுபவம்! ரசிகர்கள் கலக்கம்
கேரளாவில் பிறந்தவரான நடடிகை மஞ்சிமா மோகன் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல்முறையாக நிவின் பாலியுடன் மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழில் சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மாறி மாறி நடிக்க துவங்கினார் மஞ்சிமா மோகன்.
தற்போது தமிழில் களத்தில் சந்திப்போம், வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த சமயத்தில் அவருக்கு எதிர்பாராத விதமாக காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருந்து வரும் மஞ்சிமா இதுகுறித்து இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இரண்டு வாரங்களுக்கு முன்பு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், இன்னும் ஒரு மாதகாலம் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை என் வாழ்வில் இதுபோன்ற கசப்பான அனுபவம் நடந்ததில்லை. இதுதான் முதல் முறை. எல்லாம் ஒரு காரணத்திற்காக தான் நடக்கும்; இதுவும் கடந்து போகும் என குறிப்பிட்டுள்ளார்.