#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தேர்தல் தோல்வியால் நடிகர் மன்சூர் அலிகான் எடுத்த அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் மன்சூர் அலிகான். இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. தற்போது சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு 54,957 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்தார்.
தேர்தலில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத நடிகர் மன்சூர் அலிகான் தற்போது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்றும் வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டி உள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். மேலும் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தாள் இதை தன்னால் நேரடியாக நிரூபித்துக்காட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.