96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மாரி 2 வில்லன் நடிகரா இது... ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே!! வைரலாகும் புகைப்படம்...
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாரி 2. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் கொடூர வில்லனாக நடித்து கலக்கியவர் தான் டோவினோ தாமஸ். அதன் பிறகு டோவினோ தாமஸ் எந்த ஒரு தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை.
தற்போது மலையாள சினிமாவில் கலக்கி வருகிறார் டோமினோ தாமஸ். இவர் நடிப்பில் வெளியான மின்னல் முரளி திரைப்படம் இந்திய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது தல்லுமாலா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது டோவினோ தாமஸ் அட்ரிஷ்ய ஜலகங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகவே அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம டோவினோ தாமஸா இது ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாரே என வியந்து வருகின்றனர்.