மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. பிக்பாஸ் 5ல் கலந்து கொள்கிறாரா இந்த மாஸ்டர் பட பிரபலம்! ஓபனாக அவரே போட்டுடைத்த உண்மை!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தமிழில் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கவுள்ளது. இதன் முதல் ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக, பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
இதற்கிடையில் மாஸ்டர் படத்தில் குட்டி பவானி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் மகேந்திரன் பிக்பாஸ் 5 ல் கலந்துகொள்ளப் போவதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இதுகுறித்து கேட்டதற்கு, இந்த வாழ்க்கை, உலகமே பிக்பாஸ் போலதான் இருக்கிறது. இதுல உள்ள வேறயா.. என பதில் அளித்துள்ளார்.