ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
வெளியானது மாஸ்டர் படத்தின் டீஸர்: சும்மா கெத்தா மாஸ் காட்டும் விஜய்.. கொண்டாடும் தளபதி ரசிகர்கள்

தளபதி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி பட்டையைக்கிளப்பி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவேண்டிய மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது.
தற்போது தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், 50% இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து மாஸ்டர் படம் வெளியாவது மேலும் தாமதமாகிவருகிறது. இந்நிலையில் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் இயக்குனரிடம் கேட்டிருந்தநிலையில் படத்தின் டீசர் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மாஸ்டர் படத்தின் டீசரை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.