96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தனி ஒருவனாக மாதவன்! அதுவும் எங்கு பார்த்தீர்களா!! மிகுந்த வருத்தத்துடன் அவரே பகிர்ந்த வீடியோ!!
துபாயில் நடைபெற்று வரும் அம்ரிகி பண்டிட் என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் மாதவன் விமானத்தில் தனியாக பயணம் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சாக்லேட் பாயாக, ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தவர் மாதவன். அவர் தற்போது கல்பேஷ் இயக்கும் ‘அம்ரிகி பண்டிட்’ என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக நடிகர் மாதவன் கடந்த மாதம் இந்தியாவிலிருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்பொழுது விமானநிலையத்தில் யாருமே இல்லையாம். தனி ஆளாகவே அவர் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
அந்த வீடியோவை வெளியிட்டு, இது சோகமாக இருக்கிறது. இத்தகைய கடினமான சூழல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். அப்போது தான் நமக்கு அன்புக்குரியவர்கள் அருகில் இருக்க முடியும் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.