மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது மகன்களுக்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் புகாரளித்த இங்கிலீஷ்காரன் பட நடிகை! நடந்தது என்ன? பரபரப்பு சம்பவம்!
தமிழ் சினிமாவில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான குடைக்குள் மழை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மதுமிதா. தெலுங்கு நடிகையான அவர் இங்கிலீஷ்காரன், நாளை, அறை எண் 305-ல் கடவுள், அமீரின் யோகி, தூங்கா நகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மதுமிதா தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகர் சிவ பாலாஜியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தன்வின் கங்குலா, ககன் கங்குலா என இருமகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஐதராபாத் அருகே மணிகொன்டாவில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் ஆன்லைன் வகுப்பு மூலம் பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மதுமிதா உட்பட 240 பெற்றோர்கள் கையெழுத்திட்டு மனு கொடுத்துள்ளனர். மேலும் மதுமிதா பள்ளி நிர்வாகத்திற்கு மெயிலும் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் அவரது இரு மகன்களும் ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட நிலையில் சரியாக பதில் அளிக்காததால், மதுமிதா மற்றும் அவரது கணவர் சிவ பாலாஜி இருவரும் மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.