மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இவ்வளவு பயங்கரமாகவா மதுமிதா கையை வெட்டிக்கொண்டார்? கட்டை அவிழ்த்தபிறகு வெளியிட்ட ஷாக் புகைப்படம் இதோ.!
பிக்பாஸ் சீசன் 3 கமல் தொகுத்து வழங்க மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 பேர் மட்டுமே உள்ளனர்.
கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறினார். அதன்பின்னர் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கினார் பிக்பாஸ்.
இவ்வாறு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தநிலையில் அவர் சமீபத்தில், வர்ண பகவானும் கர்நாடகாவை சேர்த்தவரோ மறை வடிவில் கூட மழை தர மறுக்கிறார் என தான் கூறிய கவிதையை மற்ற போட்டியாளர்கள் அரசியலாக்கி வாக்குவாதம் செய்தநிலையில் தாங்க முடியாமல் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும்,அப்பொழுது கஸ்தூரியும், சேரனும்தான் என்னை காப்பாற்ற முயற்சி செய்தனர். மற்றவர்கள் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் இருந்தனர் என அவர் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அவர் தற்போது தனது கையில், போடப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவரது கைகளில் மிகவும் கோரமாக வெட்டப்பட்டுள்ளது.