மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தர்ஷன் மனுஷனே இல்லை! ஆவேசத்துடன் பொங்கியெழுந்த பிக்பாஸ் பிரபலம்!! என்ன காரணம் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை மதுமிதா. இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளர்கள் சிலர் தன்னை காயப்படுத்தியதாக, கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அவர் தான் தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கு கவின், சாண்டி , தர்ஷன், லாஸ்லியா, அபிராமி, வனிதா, ஷெரின் ஆகியோர்தான் காரணம் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.மேலும் தான் தற்கொலைக்கு முயற்சி செய்த போது கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் மட்டுமே தனக்கு உதவியதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த மதுமிதா கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் சேரனை தவிர வேறு எவரும் என்னை பார்க்கவில்லை. தொடர்பு கொள்ளவும் இல்லை.
மேலும் தர்சனின் காதலி சனம் ஷெட்டி எனக்கு போன் செய்து நலம் விசாரித்தார்.மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு தர்ஷன் உங்களை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படியில்லை என்றால் அவன் மனிதனே இல்லை என கூறியதாகவும் கூறியுள்ளார். ஆனால் தர்ஷன் இதுவரை என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. எனவே சனம் ஷெட்டி கூறியது சரிதான். தர்ஷன் மனுஷனே இல்லை என்று மதுமிதா காட்டத்துடன் பேசியுள்ளார்.