மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வியர்வையை கூட துடைக்க முடியலை! ரொம்ப கஷ்டம்.. புகைப்படத்துடன் நடிகை மீனா வெளியிட்ட மிக உருக்கமான பதிவு!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சில தளர்வுகளுடன் மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் த்ரிஷ்யம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் துவங்கியது. இதில் கலந்து கொள்ள நடிகை மீனா சென்னையிலிருந்து கேரளாவுக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது அவர் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்து சென்றுள்ளார்.
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர் நான் விண்வெளிக்குச் செல்வதுபோல இருந்தாலும், நான் போருக்குச் செல்வதைப் போலதான் உணர்கிறேன். 2 மாதங்களுக்குப் பிறகு பயணம் செய்கிறேன். விமான நிலையம் மிகவும் அமைதியாகவும், ஆள் அரவமற்று வெறிச்சோடி காணப்பட்டது. இது மிகவும் வசதியற்ற ஆடை.
அது குளிர்ந்த வானிலை மற்றும் ஏசி இருந்த போதும் மிகவும் வெப்பமாகவும், இறுக்கமாகவும் அதிகளவு வியர்வையை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. முகத்தைக்கூட துடைக்க முடியவில்லை. இரவு பகலாக இந்த உடையில் இருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன் என கூறியுள்ளார்.