#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் சேதுபதி படத்தில் நடிகராக களமிறங்கும் பிரபல இயக்குனர்! வெளிவந்த தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. அவர் குறுகிய காலத்தில் தனது முயற்சியால் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த சங்கதமிழன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி கடைசி விவசாயி, மாமனிதன், உப்பென்னா, ரணசிங்கம், ஓ மை கடவுளே, தளபதி 64, இடம் பொருள் ஏவல் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் விஜய் சேதுபதி அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற திரைபடகில் நடித்துவருகிறார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக, இசக்கி துரை பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இசை கலைஞராகவும் அவருக்கு ஜோடியாக அமலா பாலும் நடிக்கவுள்ளனர். மேலும் இதில் இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் இயக்குநர் மோகன் ராஜா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Happy to reveal that @jayam_mohanraja is doing a friendly appearance for MakkalSelvan @VijaySethuOffl ‘s #YaadhumOoreYaavarumKelir@ChandaraaArts @cineinnovations @roghanth @akash_megha @Actor_Vivek @nivaskprasanna @ruggyz @designpoint001 @rkajay94 @onlynikil pic.twitter.com/wsR91Ytq6E
— Jayam Ravi (@actor_jayamravi) November 21, 2019