மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கும் மௌன ராகம் சக்தி! அதுவும் யாருக்கு மகளாக பார்த்தீர்களா!! வீடியோ இதோ!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும் பல தொடர்கள் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்ப்பை தொடர்ந்து பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி குடும்பம், இசை என்ற கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்த தொடர் மௌன ராகம்.
இந்த தொடரில் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பேபி கிருத்திகா. இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 873 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
இந்தநிலையில் பேபி கிருத்திகா தற்போது வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். அதாவது அவர் விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் சக்ரா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே, ரெஜினா, ரோபோ சங்கர், மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சீரியல் நடிகை நீலிமா ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருக்கு மகளாக மௌன ராகம் சக்தி பேபி கிருத்திகா நடித்திருக்கிறார். இந்தநிலையில் இப்பட பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.