பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இசையமைப்பாளர் இமானும், சிவகார்த்திகேயனும் மோதலா.. "இமானின் இசை வேண்டாம்" என்று சிவகார்த்திகேயன் சண்டை.?
தமிழ் திரை உலகில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வளர்ந்து வந்த பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக பணிபுரிந்தார். இவரின் நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த பின்னர் இவரின் முதல் படமான 'மெரினா' வசூல்ரீதியாக வெற்றி பெறவிட்டாலும் விமர்சனரீதியாக ரசிகர்களை கவர்ந்தது.
இப்படத்திற்குப் பிறகு மனம்கொத்தி பறவை, 3, கேடிபில்லா கில்லாடிரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, டாக்டர் போன்ற பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து அளித்து வருகிறார்.
இது போன்ற நிலையில், அடுத்தாக கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் படம் நடிக்கவிருக்கிறார். ஜிவி பிரகாஷின் இசையமைப்பில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு முதலில் அனிருத் மற்றும் இமான் தான் இசையமைக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அனிருத் தற்போது பிஸியாக இருப்பதால் இசையமைக்கவில்லை. மேலும் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் நண்பர்களாக இருந்தாலும் தற்போது ஏதோ காரணத்தினால் பேசிக் கொள்வதில்லை.இதனால் ஜிவி பிரகாஷ் இசையமைக்க போவதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.