#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அவங்களுக்கு பிடிக்கும்னு நினைச்சு., தப்பான முடிவு எடுத்துட்டேன்" - முதல் முறையாக மனம் வருந்தி பேசிய சமந்தாவின் முன்னாள் கணவர்..!!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் தான் நாக சைதன்யா. இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் நடிகர் நாகார்ஜுனனின் மூத்த மகன் ஆவார். நடிகர் நாகார்ஜுனாவுடன் "மனம்" படத்தில் நாக சைதன்யா சேர்ந்து நடித்திருந்தார்.
இவரும், நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தங்களது பிரிவை அறிவித்தனர். அதற்கு காரணம் என்னவென்று சரியாக இதுவரையிலும் தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்திய நேர்காணலில் பேசிய நாகசைதன்யா, "தான் தன் கேரியரில் எடுத்த முடிவை நினைத்து வருந்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்".
அவர் சமீபத்தில் நடித்த "தேங்க்யூ" என்ற திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் அவர் பேசும் பொழுது, "சில சமயங்களில் கதையில் நாங்கள் தவறுகளை செய்து விடுகிறோம். ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும் என நினைத்து, கோட்டை விட்டுவிடுகிறோம்" என்று மனம் வருந்தி பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.