#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எனக்கே புதுசா இருக்கு., இப்போதான் நிம்மதியா இருக்கன்".. சமந்தாவுக்கு சரியான பதிலடி கொடுத்த நாகசைதன்யா.!!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து கோலிவுட்டில் உச்சபட்ச நடிகையாக வலம்வருபவர் தான் சமந்தா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த நடிகை சமந்தா சமீபகாலமாக மீண்டு வந்து தன் குறிக்கோளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தன் உடலையும் பிட்டாக வைத்து சமூக வலைத்தளங்களில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் மிகவும் ட்ரெண்டான தலைப்பு என்றால் அது சமந்தாவின் விவாகரத்து தான். சமந்தாவும், சைத்தான்யாவும் ஏன் பிரிந்தார்கள்? என்ற உண்மையான காரணம் தெரியாமல் பலரும் குழம்பி இருந்த நிலையில், நாக சைதன்யா வேறொருவரை காதலிப்பதாக வதந்திகள் பரவியது. ஆனால் அது முற்றிலும் பொய் என்று அந்த வதந்திக்கு சைதன்யா முற்றுப்புள்ளி வைத்தார்.
அண்மையில் ஒரு பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சமந்தா, நாக சைதன்யா குறித்து பேசும்போது, "என்னை அவருடன் ஒரு ரூமுக்குள் அடைத்து வையுங்கள். ஆனால் அங்கு கூர்மையான பொருட்கள் இருக்கக்கூடாது என்று கூறினார். ஏனெனில் அவரை பார்த்தால் ஆயுதம் எடுத்து அடித்துவிடுவேன்" என்பது குறித்து பேசியிருந்தார்.
சமந்தா குறித்தும், தன் விவாகரத்து குறித்தும் வாய் திறக்காமல் இருந்த நாக சைதன்யாவும் அண்மையில் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "விவாகரத்துக்கு பின் நான் வேறு மாதிரி இருக்கிறேன். எனது குடும்பத்தோடு அதிகமாக நேரம் செலவிடுகிறேன். என்னை எனக்கே புதிதாக தெரிகிறது.
முன்பை விட அதிகமாக அனைவரிடமும் நெருங்கி பழகுகிறேன்" என்றார். அவர் கூறுவது சமந்தாவுடன் அதிகநேரம் செலவிட்டதால் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் இருந்ததாகவும், வெளியுலகில் பேசாமல் இருந்ததாகவும் குறிப்பிட்டு பேசியுள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.