திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நக்மாவுடன் ரகசியஉறவில் இருந்த சரத்குமார்.. உண்மை தெரிந்த உடனே ராதிகா செய்த செயல்.?
தமிழ் திரையுலகில் 90களில் தொடக்கத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் நக்மா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்திருக்கிறார்.
மேலும், தமிழில் 'காதலன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலிருந்து பாட்ஷா, ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், காதல் பறவைகள், மேட்டுக்குடி, பெரிய தம்பி, பிஸ்தா, வேட்டிய மடிச்சு கட்டு, தீனா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஜோதிகாவின் சகோதரியான நக்மா இவரின் நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே பிடித்தார். இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே இருந்து வரும் நக்மா சினிமா துறையில் இருந்த காலகட்டத்தில் பலருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.
இதன்படி கிரிக்கெட் வீரரான கங்குலியுடன் ரகசிய உறவில் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதன் பிறகு இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு சில வருடங்களுக்குப் பிறகு நடிகர் சரத்குமாருடன் இணைத்து பேசப்பட்டு வந்தார். சரத்குமாருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்த நக்மா இவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தார். இப்பொழுது வரை திருமணமாகாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.