ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
எத்தனை படத்தில் நடித்தேன் என்பதை விட.. எந்த படங்களில் நடித்தேன் என்பதே முக்கியம் - நானி!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. தற்போது நானியின் 30வது திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஷெளர்யுவ் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஹாய் நான்னா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக, மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை வைரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ஹீஷம் அப்துல் வாஹாய் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நானி, எனக்கு அதிக படங்களில் நடிக்க ஆசை இல்லை. படத்தின் எண்ணிக்கையை விட அதன் தரத்தில் தான் கவனம் செலுத்துகிறேன். இப்போது 300 படம் நடித்து இருந்தாலும் பிடித்த படம் என்று கேட்டால் 5 படங்களை மட்டுமே சொல்வார்கள். நான் அந்த பட்டியலை அதிகரிக்க முயல்கிறேன் என தெரிவித்துள்ளார்.