#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வேற லெவல்.. ஆஸ்கார் விருது வென்ற ஆர்ஆர்ஆர் பட நாட்டு நாட்டு பாடல்.! கொண்டாடும் ரசிகர்கள்!!
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் கொடுத்த திரைப்படம் ஆா்ஆா்ஆா். இதில் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் உலகளவில் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு நாட்டு பாடல் பட்டி தொட்டியெல்லாம் செம ஹிட்டானது. எம்.எம். கீரவாணி இசையமைப்பில் ராகுல் மற்றும் கால பைரவா பாடிய இந்த பாடலில் தோள் மீது கை போட்டுகொண்டு ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரண் போட்ட ஆட்டம் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது.
இந்த பாடல் ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப்ஸ் விருதை வென்று இந்திய திரையுலகத்திற்கு பெருமை சேர்த்தது. இந்நிலையில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்றிருந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் உற்சாகத்தில் உள்ளனர்.