மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா நேரத்தில், கும்மென தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா! வைரலாகும் வீடியோ!
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கென ஏராளமான பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் ரசிகர்கள் இவரை பிரபல நடிகர்களுக்கு இணையாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது. மேலும் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் என அடுக்கடுக்காக திரைப்படங்கள் அவரது கைவசம் உள்ளது.
Ujala Crisp and Shine TVC. #Ujala #JyothyLaboratories#Nayanthara pic.twitter.com/jsGVySEyvE
— Nayanthara (@Team_Nayanthara) July 15, 2020
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா அசுரவேகத்தில் பரவி வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், நயன்தாரா தற்போது விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த விளம்பர வீடியோ சமூக வலைதளங்களில், வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வைரலாகி வருகிறது.