மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதன்முதலாக உலக நாயகனுடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார்.! அதுவும் எந்த இயக்குனர் படத்தில் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து கமல் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
36 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து உருவாகும் KH234 படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறாராம். மேலும் அந்தப் படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்க உள்ளனர். KH234 படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
கமல் மற்றும் திரிஷா இருவரும் ஏற்கனவே இணைந்து மன்மதன் அம்பு’, ‘தூங்காவனம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படம் இருவரும் இணையும் மூன்றாவது படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் நடித்தால் இது நயன்தாரா மற்றும் கமல் இணைந்து நடிக்கும் முதல் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.