திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காசுக்காக திருமணம் செய்தாரா வரலட்சுமி.? நெட்டிசன்களுக்கு சரத்குமார் பதிலடி.!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் பாடி பில்டரான நிகோலய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வரலட்சுமி திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு நெகடிவ் விமர்சனங்கள் இருந்தன. இதற்கு அவரது தந்தை சரத்குமார் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
வரலட்சுமி
சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் சர்க்கார், விக்ரம் வேதா போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். வித்தியாசமான கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வந்தார்.
திருமணம்
நடிகர் விஷாலை காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் வரலட்சுமி மற்றும் நிகோலய் சச்தேவ் ஆகிய இருவரும் காதலிப்பதாகவும் விரைவிலேயே திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து பெற்றோர் முன்னிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் வைத்து நடைபெற்றது. மேலும் சில தினங்களுக்கு முன்பு வரலட்சுமி மற்றும் நிகோலய் திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது .
இதையும் படிங்க: ஷாக்கிங்... பிளேபாய் பார்த்திபன்.? பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய புதிய சர்ச்சை.!!
நெகட்டிவ் விமர்சனங்கள்
வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் குறித்த தவறான விமர்சனங்கள் இணையதளங்களில் வைரலாக பரவியது. வரலட்சுமி சரத்குமாரின் கணவர் நிகோலய் மோசமானவர் என்றும் ஏற்கனவே திருமணம் ஆகி டீன் ஏஜ் வயதில் மகள் இருக்கும் ஒருவரை பணத்திற்காக வரலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்று இணையதளங்களில் பலரும் எழுதி வந்தனர்.
சரத்குமார் பதிலடி
தனது மகள் திருமணம் குறித்து இணையதளங்களில் பரவி வந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு சரத்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் இணையதளங்களில் வரும் விமர்சனங்களை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு விஷயம் அதன் வரம்பு மீறிப் போகும் போது அதைப் பற்றி பேசுவது அவசியமாகிறது என தெரிவித்திருக்கிறார். உங்கள் மனதில் எழும் கருத்துக்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை கண்டபடி விமர்சிக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ள சரத்குமார் வரலட்சுமிக்கு அவரது கணவரை பிடித்திருப்பதால் தான் திருமணம் செய்து இருக்கிறார் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அடி தூள்... கைதி 2 எப்போது.? கார்த்தி கொடுத்த சூப்பர் அப்டேட்.!! குஷியில் ரசிகர்கள்.!!