மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்டிப்பா இதுதான் அவசியம்.. பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய நிபந்தனை! என்ன தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்ப்பர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக 4 சீசன் முடிவடைந்துள்ளது.
மேலும் பிக்பாஸ் 5வது சீசன் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் ஜூன் மாதம் துவங்கவுள்ளதாக கூறப்பட்ட இந்நிகழ்ச்சி கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கான தேர்வு மற்றும் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் 14 நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தி கொண்டால் போதாது, கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அதன்பிறகுதான் பிக்பாஸ் வீட்டில் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் தொழில்நுட்ப கலைஞர்களும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.