பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணையும் பிரபல தமிழ் நடிகர்கள்; யார் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தனக்கே உரித்தான தனி பாணியில் அவருடைய படைப்புகள் இருக்கும். அதில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகிகளின் நடிப்பு திறமையை மேலும் மெருகூட்டக் கூடியவர்.
அவரிடம் பணியாற்றிய விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா தோன்ற கதாநாயகர்கள் இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தெலுங்கில் வெற்றி பெற்ற படமான அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவை வைத்து இயக்கினார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அப்படத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அதர்வா, ஆர்யாவை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் இக்கூட்டணியில் உருவாகும் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதர்வா பரதேசி படத்திலும் ஆர்யா 'அவன் இவன்' 'நான் கடவுள்' படங்களிலும் பாலா இயக்கத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.