96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"மாமதுர பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை!" வீடியோ வைரல்!
2017ம் ஆண்டு "தொண்டிமுதலும் ட்ரிக்ஷாக்ஷியும்" என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். தொடர்ந்து ஈடா, மாங்கல்யம் தந்துனானே, நல்பதியோன்னு, சோழன், தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து தமிழில் சமீபத்தில் வெளியான "சித்தா" படத்தில் அறிமுகமானார் நிமிஷா சஜயன். தொடர்ந்து தமிழில் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" படத்திலும் நடித்துள்ளார். கடந்த நவம்பர் 10ம் தேதி வெளியான "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.
ராகவா லாரன்ஸ், எஸ். ஜே. சூர்யா, இளவரசு, சஞ்சனா நடராஜன், சத்யன், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் ஹிட்டாக அமைந்துள்ளது. இதில் கதாநாயகியாக நடித்துள்ள நிமிஷா சஜயன் தன் யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் ஜிகர்தண்டா படத்தில் இடம்பெற்ற "மாமதுர" பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு நிமிஷா சஜயன் நடனமாடியுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.