மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தமிழ் சினிமாவால், மோசமான அனுபவம்." நடிகை நித்யா மேனன் பகீர் தகவல்.!
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் நடிகை நித்யா மேனன் திரைத்துறையை விட பத்திரிகை துறையில் தான் ஆர்வம் அதிகம் கொண்டிருந்ததாக அவரே தனது பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அதன் பின் பத்திரிகை துறையில் இருந்து அவருக்கு இன்ட்ரஸ்ட் போய்விட்டது.
இதன் காரணமாக அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நித்யா மேனன் நடித்திருக்கின்றார். அவரது ஜப்பியான உடலமைப்பும், குழந்தை போன்ற முகமும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் குறித்து நித்யா மேனன் ஓபனாக பேசியிருக்கிறார். அதில் அவர், "நான் தெலுங்கு சினிமாவில் நடித்திருக்கிறேன் அங்கு எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டது இல்லை.
எனக்கு முதன்முறையாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டது தமிழ் சினிமாவில் தான். பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தினார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்." என்று கூறியுள்ளார்.