#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மழையை ரசித்துப் போட்ட பதிவால் நிவேதா பெத்துராஜை வறுக்கும் நெட்டிசன்கள்!
கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையை நெருங்கிய மிக்ஜாம் புயல், அன்று மாலையில் இருந்து நேற்று நள்ளிரவு வரை கனமழையாகப் பொழிந்து வருகிறது. இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8பேர் மழையால் இறந்துள்ளனர். தமிழக அரசு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. ஆனால் சில பிரபலங்களின் மழை குறித்த இணையப் பதிவுகள் பொதுமக்களை வெறுப்பேற்றும் வகையில் உள்ளன.
அந்தவகையில் தற்போது "ஒரு நாள் கூத்து" என்ற படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் "மழை பெய்யும்போது சென்னை தான் சிறந்தது"என்ற அர்த்தத்தில் மழையை ரசித்து பதிவிட்டுள்ளார். இது நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது.
"ஊரே வெள்ளத்தில் மூழ்கியுள்ளபோது, நீங்கள் பஜ்ஜி சாப்பிட்டு மழையை ரசித்துக் கொண்டிருங்கள்" என்று அவரை விமர்சித்ததோடு இல்லாமல், ஆஸ்கர் புகழ் "பாராசைட்" என்ற முதலாளி - தொழிலாளி வர்க்க பேதத்தை மையமாக கொ-ண்டு எடுக்கப்பட்ட படத்தின் காட்சியை கமெண்டில் பதிந்து வருகின்றனர்.