#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூர்ய வெளிச்சத்தில் நட்சத்திரமாக மின்னும் நிவேதா பெத்துராஜ்.. வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார்.
தமிழில் முதன் முதலில் 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இப்படத்திற்கு பின்பு பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருந்தார் நிவேதா பெத்துராஜ்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் தெலுங்கு மொழி சினிமாவில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நிவேதா, அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு தற்போது சூரிய வெளிச்சத்தில் இரயிலில் பயணம் செய்வது போல் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் "நட்சத்திரமாக ஜொலிக்கிறீங்க" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.