மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடஅட.. அப்பா, மகனுடன் அசத்தும் அருண்விஜய்! வெளிவந்த சூப்பரான தகவல்! என்ன தெரியுமா??
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக முன்னேறி வருபவர் நடிகர் அருண்விஜய். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இந்த நிலையில் அருண் விஜய் தற்போது ஓ மை டாக் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இவருடன் தந்தை விஜயகுமார், மகன் அர்னவ், வினய், மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மூன்று தலைமுறைகள் இணைந்து நடிக்கும் இப்படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தை சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார். நிவாஸ் பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Oreo, Waffle, Jo and I, bring to you #OhMyDogOnPrime a film from our hearts to yours, on 21 April @PrimeVideoIN #ArnavVijay #Simba @arunvijayno1 pic.twitter.com/HclXF3r6Ua
— Suriya Sivakumar (@Suriya_offl) April 6, 2022
இந்நிலையில் தற்போது ஓ மை டாக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து சூர்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது படம் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி அமேசன் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய் அவரது மகன் மற்றும் தந்தையுடன் இணைந்து நடித்துள்ள இப்படத்தை காண்பதற்கு அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.