மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பா, மகனுடன் அசத்தும் நடிகர் அருண் விஜய்! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சூப்பர் ட்ரைலர்! நீங்க பார்த்துட்டீங்களா!!
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக முன்னேறி வரும் நடிகர் அருண் விஜய் தனது தந்தை விஜயகுமார் மற்றும் மகன் அர்ணவ் உடன் இணைந்து ஒன்றாக நடித்துள்ள திரைப்படம் ஓ மை டாக். மேலும் இப்படத்தில் வினய், மஹிமா நம்பியார், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை
சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார்.
மூன்று தலைமுறைகள் இணைந்து நடிக்கும் ஓ மை டாக் படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. நிவாஸ் பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி அமேசன் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓ மை டாக் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அருண் விஜய் அவரது மகன் மற்றும் தந்தையுடன் இணைந்து நடித்துள்ள இப்படத்தை காண்பதற்கு அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.