96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அட நடிகை ஊர்வசியின் மகளா இது! கொழுகொழுவென லட்டு மாதிரி அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாரே!
தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஊர்வசி. 80களில் கொடிகட்டிப் பறந்த அவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் இறுதியாக ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகை ஊர்வசி கடந்த 2000ம் ஆண்டு மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான மனோஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு குஞ்சட்டா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் திருமணமான 8 ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். மேலும் மகள் குஞ்சட்டா தந்தை மனோஜிடம் வளர்ந்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து ஊர்வசி 2013ம் ஆண்டு சென்னையை சேர்ந்த சிவபிரசாத் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2014 ல் ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் நன்கு வளர்ந்து அழகில் அம்மாவையே மிஞ்சிய ஊர்வசியின் மகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.