மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓ.டி.டி-யில் முதலிடம் பிடித்த அஜித்தின் அந்த திரைப்படம்.!
2023-ஆம் வருடத்தில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. அந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர், தளபதி விஜயின் நடிப்பில் வெளியான வாரிசு, லியோ, அஜித் நடிப்பில் வெளியான துணிவு உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
அதேபோல 2023 ஆம் வருடத்தில் ஓடிடியில் அதிகமாக பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அந்த பட்டியலில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை ஓ டி.டியில் 2 கோடி நபர்கள் பார்த்திருக்கிறார்கள்.
அதேபோல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் 2-வது இடத்திலும், நடிகர்கள் விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளியான கட்டாகுஸ்தி திரைப்படம் 3-வது இடத்திலும், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டி.எஸ்.பி திரைப்படம் 4-வது இடத்திலும், திரிஷா நடிப்பில் வெளியான ராங்கி திரைப்படம் 5-வது இடத்திலும் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.