#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணம் முடிந்தும் அதுக்காக 5 வருடம் காத்திருக்கும் அனிதா சம்பத்!! வெட்கத்தை விட்டு கணவனிடம் வேண்டுகோள்..
தன் கணவரிடமிருந்து ஐ லவ் யூ என்ற வார்த்தையைக் கேட்க 5 வருடமாக காத்திருப்பதாக பிக் பாஸ் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். இதனை அடுத்து விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
என்னதான் மீடியாவில் பிசியாக இருந்தாலும், எப்போதும் தனது காதல் கணவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என சமூக வலைத்தளங்களிலும் பிசியாக உள்ளார் அம்மணி. இந்நிலையில் தனது 2-ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, கணவர் பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிடுள்ளார் அனிதா.
அதில், "சிறந்த கணவர்! என் குடும்பத்திற்கு சிறந்த மருமகன் (மற்றும் இரண்டாவது மகன்)! எனது நாத்தனார்கள் & மாமியாருக்கு சிறந்த சகோதரர் மற்றும் மகன். ஒவ்வொரு விதத்திலும் மிஸ்டர் பெர்ஃபெக்ட்!
கடவுள் எனக்கு வாழ்க்கைல பண்ண பெரிய நல்ல விஷயம் உன்ன சந்திக்க வச்சது தான்! மீடியா பெண்ணின் வளர்ச்சியை திருமணம் நிறுத்தும் என்று கூறினார்கள்! ஆனால் நம் திருமணத்திற்கு பிறகு தான் நான் வளர்ந்தேன்! அதற்கு உனது நம்பிக்கை, நீ கொடுத்த சுதந்திரம் மற்றும் ஊக்கம் தான் காரணம்.
அனைத்து மேடு பள்ளங்களையும் தாண்டி நீ என்னிடம் காட்டும் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி!
எனக்காக நீ செய்யும் எல்லாவற்றிற்கும் நன்றி! ஒன்றாக நம் கனவுகளைத் துரத்தலாம் பப்பு!
என் வளர்ச்சியோட காரணமா இருந்துட்டு, ஓரமா நின்னு கை தட்டி ரசிக்கிற உனக்கு திருப்பி குடுக்க காதலை தவிர எதுவும் இல்ல! நம் காதல் போல் நாமும் வளர்வோம்!
இரண்டாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் பப்பு! மேலும் 61-வது மாத காதல் ஆண்டுவிழா! சீக்கிரமா “ஐ லவ் யூ” சொல்லி தொலை. 5 வருஷமா காத்திருக்கேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.