மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்ரா...! மாடர்ன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவரும் அண்ணன் தம்பிகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பம் என மக்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
இந்த தொடரின் பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்த நடிகை சித்ரா சமீபத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டநிலையில், தற்போது அவரது கதாபாத்திரத்தில் காவியா என்பவர் நடித்து வருகிறார். அவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த தொடரில் மூர்த்தி அண்ணனாக ஸ்டாலின், தனம் கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா, மீனாவாக நடிகை ஹேமா ராஜ்குமார், ஜீவா கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கட் ரங்கநாதன், கதிராக குமரன், கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரம் ஆகியோர் நடித்துவருகின்றனர்.
பாண்டியன் தொடரில் அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் எப்போதும் சாதாரண தோற்றதில்லையே நடித்துவரும் நிலையில், தற்போது அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் மிகவும் மாடர்னாக உடை அணிந்து, தோளில் கைபோட்டவாறு ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.