என்னது.. 6 பெண்களை காதலித்து ஏமாற்றினாரா நடிகர் பிரபுதேவா.! வெளிவந்த பரபரப்பு தகவல்! ஷாக்கில் ரசிகர்கள்!!



paheera-movie-story-detail-viral

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என வலம்வரும் பிரபுதேவா தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள படம் பஹீரா. இப்படத்தை பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்துள்ளார்.மேலும் அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படம் வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பகீரா படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சூப் பாய்ஸ்களுக்கு இது தான் உண்மையான சுதந்திர தினம் என குறிப்பிடபட்டிருந்தது. இந்த நிலையில் பகீரா படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது .

paheera

அதவாது பகீரா படத்தில் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனாராம். இவர்களில் 6 பேரை காதலித்து ஏமாற்றக்கூடிய சைக்கோ கேரக்டரில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வித்தியாசமான கதைமிக்க இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது