மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா..பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா! நீங்க பார்த்திருக்கீங்களா!! வைரலாகும் வீடியோ!!
தற்காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திரைப்படங்களை விட சீரியலை அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகிவரும் தொடர் பாக்கியலட்சுமி.
தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு, எப்படியாவது தன்னிச்சையாக தனக்கென ஒரு தொழிலை நிலைநாட்ட வேண்டும் என போராடும் குடும்பத் தலைவியின் கதையை மையமாகக் கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இத்தொடரில் பொறுப்பான அம்மாவாக, அப்பாவி மனைவியாக பாக்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா தனது உண்மையான மகளுடன் டிக்டாக் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.