மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. பாக்கியலட்சுமி அம்மாவா இது! மாடர்ன் டிரஸ், கூலிங் கிளாஸ்னு வேற லெவலில் எப்படியிருக்கார் பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகிவரும் தொடர்தான் பாக்கியலட்சுமி. தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு, எப்படியாவது தன்னிச்சையாக தனக்கென ஒரு தொழிலை நிலைநாட்ட வேண்டும் என போராடும் குடும்பத் தலைவியின் கதையை மையமாகக் கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடருக்கு குடும்பத் தலைவிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இத்தொடரில் பொறுப்பான அம்மாவாக, அப்பாவி மனைவியாக பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் பலரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது நடிகை சுசித்ரா மாடர்ன் உடை, கூலிங் கிளாஸ் என செம ஸ்டைலாக கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.