சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க சுஜிதா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளிவந்த தகவல்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பம், அண்ணன் தம்பி பாசம் போன்றவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன் மற்றும் காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இதில் தனம் என்ற கதாபாத்திரத்தில் தனது கணவரின் தம்பிகளை அம்மாவாக, பாசத்துடன் பார்த்துக்கொள்ளும் அண்ணியாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான படங்கள், சீரியல்கள் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சுஜிதா, ஒரு நாளைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்காக வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அவர் அந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.