#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு இவ்ளோ பெரிய மகனா.! கியூட்டா இருக்காரு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் அண்ணன்- தம்பிகளின் பாசம், கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது.
இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இதில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார். இவர் தனது கணவரின் தம்பிகளை அம்மாவாக, பாசத்துடன் பார்த்துக்கொண்டு, குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு செல்லும் அண்ணியாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் அவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அவர் தற்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் சுஜிதாவிற்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.