மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இந்த நிலைமை.. அதனாலதான் நாடகத்துல இப்படி சமாளிச்சாங்களா.?
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவாவாக நடித்துவரும் வெங்கட் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது அவர் அதில் இருந்து மீண்டுவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தொடரின் பெரும் வெற்றிக்கு காரணமாக இருந்த முல்லை - கதிர் கதாபாத்திரத்தில் முல்லையாக நடித்துவந்த சித்ரா சமீபத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்போது அவரது கதாபாத்திரத்தில் காவியா என்பவர் நைத்துவருகிறார். முல்லை தற்கொலை செய்துகொண்ட தகவலே பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் இன்னும் மறையாதநிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு வந்துள்ளது.
அந்த தொடரில் மற்றொரு பிரபலமான கதாபாத்திரமாக நடித்துவரும் ஜீவாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா நடிக்கவில்லை. அவர் வெளியூர் சென்றிருப்பதாக காட்டப்பட்டது.
ஆனால், ஜீவாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் தனிமை படுத்தப்பட்டதாலையே தொடரில் நடிக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அவர் தற்போது அதில் இருந்து குணமடைந்து மீண்டு வந்துருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.