96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
படையப்பா பட ஷூட்டிங்கின் போது டச்சப் மேனாக மாறிய ரஜினி! அதுவும் யாருக்காக பாருங்க. புகைப்படம் இதோ
படையப்பா படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் பைட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு மேக்கப் மேனாக மாறிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் படையப்பா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்று படையப்பா.
பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது படையப்பா திரைப்படம். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணனை சினிமா உலககில் மிகவும் பிரபலமாக்கியதும் படையப்பா படம்தான். படையப்பா படத்தில் அவர் நடித்திருந்த நீலாம்பரி என்ற கதாபாத்திரம் இன்று வரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
இப்படி பல்வேறு முக்கியத்துவங்களை கொண்ட இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. நடிகர் ரஜினிகாந்த் பைட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு மேக்கப் மேனாக மாறிய புகைப்படம் அது. ரஜினிகாந்த் கையில் கண்ணாடியுடன் நிற்க, கனல் கண்ணன் தலைவாரும் அந்த காட்சி தற்போது வைரலாகிவருகிறது.