"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
சாலமன் பாப்பையா சிவாஜி படத்திற்கு பின்னர் நடிக்காததற்கு காரணம் என்ன?. உண்மையை உடைத்த பட்டிமன்ற பேச்சாளர்..!
நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், நயன்தாரா, எம்.எஸ் பாஸ்கர், கனல் கண்ணன், மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, ரகுவரன், மணிவண்ணன், கொச்சின் கனீபா உட்பட பலர் நடித்து கடந்த 2007ல் வெளியான திரைப்படம் சிவாஜி. இப்படத்திற்கு இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
இந்த படத்தில் நாயகன் ரஜினி நாயகி ஸ்ரேயாவை பெண் பார்க்க வீட்டிற்கு செல்லும்போது, அங்கு அண்டை வீட்டில் வசித்து வருபவரின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, தனது இரண்டு இரட்டையர் மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோரில் யாரேனும் ஒருவரை ரஜினியை மணம்முடிக்க விருப்பம் தெரிவிப்பார். இது தொடர்பான நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் சாலமன் பாப்பையா படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அதற்கான காரணம் குறித்து பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், "எங்களுக்கு அவர்கள் கூறிய நகைச்சுவை காட்சிகள் வேறு மாதிரி. யாரையும் காயப்படுத்தாமல் அங்கவை, சங்கவைக்கும் வெளிர் நிறத்துடன் கூடிய மணமகன் அமைவதை போல காட்சி சொல்லியிருந்தார்கள்.
படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் தான் எங்களுக்கு நடந்த நிகழ்வு தெரியவந்தது. அவர்கள் இரட்டையர்களான அங்கவை, சங்கவை ஆகியோரையும் அவமதித்துவிட்டார்கள். இலக்கியவாதியாக, பட்டிமன்ற நடுவராக பணியாற்றிய சாலமன் பாப்பையாவை பலரும் திட்டினார்கள். அவரின் வீட்டிலும் அவருக்கு கண்டனம் குவிந்தது. இதனாலேயே அவர் படங்களில் நடிக்கவில்லை.
அவரை எப்படியாவது படத்தில் நடிக்க வைத்திட வேண்டும் என பலரும் முயற்சித்தார்கள். அவர் முடியவே முடியாது என மறுத்துவிட்டார். படம் வெளியான பின்னர் எங்களின் நியாயத்தை நாங்கள் யாரிடம் சென்று கேட்பது?. ஏதேனும் ஒரு படத்தில் நடித்தாலும், அதனை சர்ச்சையாக்கிவிடுவார்கள் என்ற எண்ணம் இப்போதும் இருக்கிறது" என பேசினார். இதுவே சாலமன் பாப்பையா சிவாஜி படத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருப்பதற்கான காரணம் எனவும் கூறப்படுகிறது.