பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகர் பவன் கல்யாணின் பிறந்தநாள் பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி ரசிகர்கள் பலி! துயரச்சம்பவம்!
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கடந்த 2017-ல் முழுநேர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்துவிட்டு படங்களில் நடிப்பதை அவர் நிறுத்திக்கொண்டார். ஆனால், தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக அமையாததால், மீண்டும் சினிமாவில் அதிகக் கவனம் செலுத்த தொடங்கினார் .
1971ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி பிறந்த நடிகர் பவன் கல்யாண் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள அவரது ரசிகர்கள் பேனர் கட்டுவதும், போஸ்டர் ஓட்டுவது என மும்முரமாக இருந்தனர்.
இந்தநிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியில் வசிக்கும் அவரது வீட்டிற்கு முன்பு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதனையடுத்து தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடிகர் பவன் கல்யாண் பிறந்தநாளை கொண்டாட காரில் 5 இளைஞர்கள் சென்றுகொண்டிருந்த பொழுது பசர்கொண்டா அருகே எதிரே வந்த லாரி இளைஞர்களின் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல் நேற்று இரவு சித்தூர் மாவட்டத்தில், நடிகர் பவன் கல்யாணை வாழ்த்தி, அவரது வீட்டின் முன்பு பேனர் வைத்த போது, மின்சாரம் தாக்கி 3 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், நடிகர் பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
— Boney Kapoor (@BoneyKapoor) September 2, 2020
நடிகர் பவன் கல்யாண் தனது பிறந்த நாளை ரசிகர்கள் பேனர் கட்டி கொண்டாட வேண்டாம் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்திருந்த சூழலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் உயிரிழந்த 3 ரசிகர்கள் குடும்பத்துக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் வக்கீல் சாப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.