"பல பிரபலங்கள் கட்டாயபடுத்தியும் 'நோ' சொன்ன பெப்சி உமா!" இது தான் காரணமாம்!



Pepsi uma dont like to act in cinema

தமிழ் தொலைக்காட்சிகளின் முதல் நட்சத்திர தொகுப்பாளினி என்றால் அது 'பெப்சி' உமா தான். பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற டெலிபோன் மூலம் நேரடியாக மக்களிடம் உரையாடும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் உமா.

PEPSI

அந்த நிகழ்ச்சியில் அவர் உடுத்தி வரும் புடவைகள், அவரது சிரிப்பு மற்றும் அனைவரையும் மரியாதையுடன் பெயர் சொல்லி அழைக்கும் பாங்கு என 90'ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாக இருந்தவர் உமா. இன்றுவரை அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உண்டு.

1995ம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சியை தொடர்ந்து 15ஆண்டுகள், 325 எபிசோடுகளை தொகுத்து வழங்கியுள்ளார் உமா. சில ஆண்டுகளாக காணாமல் போயிருந்த உமா, சமீபத்தில் ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

PEPSI

அதில் பேசிய அவர், சல்மான், ஷாருக்கான் ஆகியோருடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததாகவும், கே. பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோரின் படத்தில் நடிக்க வந்த வாய்ப்புக்கும் 'நோ' சொல்லி விட்டதாகவும், கூறியவர், "எனக்கு நடிப்பில் விருப்பமில்லை. அதனால் தான் மறுத்துவிட்டேன்" என்றும் கூறியுள்ளார்.